தமிழ்நாடு

போலி சான்றிதழ்? - 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு ரத்து

போலி சான்றிதழ்? - 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு ரத்து

Sinekadhara

இருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட்டதால் 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கலந்தாய்வின்போது மாணவர்கள் தங்கள் இருப்பிடச் சான்றிதழை அளிக்கவேண்டும்.

சில மாணவர்கள் இரண்டு இருப்பிடங்கள் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி போலியான இருப்பிட ஆவணங்களைத் தயாரித்து இருந்ததாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இதனால் மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழ்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், 4 மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழ்கள் போலியானதா என எழுந்த சந்தேகத்தின்பேரில் சிறப்புக் குழுவினர் ஆராய்ந்து அவர்களின் கலந்தாய்வு அனுமதியை ரத்து செய்துள்ளனர். விசாரணையில் இந்த சான்றிதழ்கள் போலி என தெரியவந்தால் மாணவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.