தமிழ்நாடு

4 மாணவிகள் தற்கொலை விவகாரம்: 2 ஆசிரியைகள் சஸ்பெண்ட்

4 மாணவிகள் தற்கொலை விவகாரம்: 2 ஆசிரியைகள் சஸ்பெண்ட்

Rasus

வேலூர் பனப்பாக்கத்தில் 4 மாணவிகள் தற்கொலை விவகாரத்தில் 2 ஆசிரியைகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவந்த தீபா, சங்கரி, மணீஷா, ரேவதி ஆகிய நான்கு மாணவிகள் ராமாவரத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்டனர். ஆசிரியர்கள் திட்டியதால் மனமுடைந்த நான்கு மாணவிகளும் ஒரே நேரத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. மாணவிகளின் உயிரிழப்பு தொடர்பாக பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 4 தனிப்படை போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாணவிகள் தற்கொலை விவகாரத்தில், பள்ளி தலைமை ஆசிரியை ரமா பாய், ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாவும், திங்கட்கிழமை சக மாணவிகளிடம் விசாரணை நடைபெறும் எனவும் மாவட்ட கல்வி அதிகாரி விளக்கம் தெரிவித்துள்ளார்.