மாட்டுச்சாணத்தை கஞ்சா என விற்றவர்கள் - வாங்கியவர்கள் pt desk
தமிழ்நாடு

திருப்பூர்: மாட்டுச் சாணத்தை கஞ்சா என விற்றவர்கள், விலை கொடுத்து வாங்கியவர்கள் கைது!

திருப்பூரில், மாட்டுச் சாணத்தை கஞ்சா என விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்

திருப்பூர் மங்களம் சாலை, பழ குடோன் பகுதியில், மத்திய காவல்நிலைய ரோந்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கஞ்சா போன்ற பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

Arrested

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் லோகநாதன் (22), உமா மகேஸ்வரன் (21) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் மங்கலம் சாலையில், 33 ஆயிரம் ரூபாய் கொடுத்து கஞ்சா வாங்கி வந்ததாகவும், எடை அதிகமாக இருந்ததால் சந்தேகமடைந்து பிரித்துப் பார்த்த போது அதில், மாட்டு சாணம் மற்றும் வைக்கோல் கலந்து கஞ்சா என விற்று மோசடி செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கேவிஆர் நகரைச் சேர்ந்த சாரதி (21), கவின் (22) ஆகிய இருவரையும் பிடித்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ ஒரிஜினல் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். லோகநாதன், உமா மகேஸ்வரன், சாரதி, கவின் ஆகிய நால்வரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.