சுங்கச்சாவடிகள் முகநூல்
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமல்

PT WEB

சாலைகளை பராமரிக்கும் விதமாக வாகன ஓட்டிகளிடம் கட்டணத்தை வசூலிக்கும் பணியை சுங்கச்சாவடிகள் மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த சூழலில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அது தள்ளிப் போனது.

சுங்கச்சாவடி

இச்சூழலில் 7 கட்ட வாக்குப்பதிவும் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, திருப்பத்தூர் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து புதிய கட்டண உயர்விற்கான அறிவிப்பு பலகையை சுங்கச்சாவடியில், சுங்கச்சாவடி ஊழியர்கள் வைத்தனர்.