தமிழ்நாடு

டிப்திரியா வைரஸ் அறிகுறி - 36 பேர் மருத்துவமனையில் அனுமதி 

டிப்திரியா வைரஸ் அறிகுறி - 36 பேர் மருத்துவமனையில் அனுமதி 

webteam

சத்தியமங்கலத்தை சேர்ந்த 36 பேர் டிப்திரியா வைரஸ் அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

30 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை அச்சுறுத்திய உயிர்க்கொல்லி நோயான தொண்டை அடைப்பான் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல பரவி வருகிறது. அப்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ நடவடிக்கைகள் காரணமாக தொண்டை அடைப்பான் நோய், முற்றிலும் களையப்பட்டது. 

இந்நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தொண்டையில் சவ்வு போன்று உருவாகி உணவு உட்கொள்ளவும், மூச்சு விடவும் முடியாத நிலையும் ஏற்படும். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கே இந்த நோய் அதிகமாக பரவுகிறது. டிப்திரியா எனும் வைரஸால் இந்த நோய் பரவுகிறது. 

தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு 6 வாரம், 10 வாரம், 14 வாரம் மற்றும் ஒன்றரை வயதில் முறையாக தடுப்பூசி போடுவதன் மூலம் தொண்டை அடைப்பான் நோயை தடுக்க முடியும் என்று தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், சத்தியமங்கலத்தை சேர்ந்த 36 பேர் டிப்திரியா வைரஸ் அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.