தமிழ்நாடு

தனுஷ்கோடியில் 30 அடி உயரத்திற்கு எழுந்த கடல் அலைகள்: ஆபத்தை உணராமல் குளித்த பயணிகள்

தனுஷ்கோடியில் 30 அடி உயரத்திற்கு எழுந்த கடல் அலைகள்: ஆபத்தை உணராமல் குளித்த பயணிகள்

sharpana

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கடல் சீற்றத்தால் 30 அடிக்கு மேல் அலைகள் எழும்பின.

ராமநாதபுரம் மாவட்டம் அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. படகுதுறைக்கான பாலத்தில் கடல் அலைகள் மோதி ஆக்ரோஷத்துடன் எழுந்த அலைகளின் அபாயத்தை உணராமல், சுற்றுலாப் பயணிகள் சிலர் கடலில் குளித்தனர். தடையை மீறும் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், காவல்துறையினர் அலட்சியமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.