தமிழ்நாடு

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல் அடக்கத்தில் குறுக்கிட்டால் 3 ஆண்டுகள் சிறை

webteam

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல் அடக்கத்தில் குறுக்கிட்டால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அரசு சட்டம் இயற்றியுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலைத் தகனம் செய்யவோ அல்லது அடக்கம் செய்யவோ இடையூறு செய்து குறுக்கீடு செய்தால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. உடல் அடக்கம் அல்லது தகனத்தைத் தடுப்பது குற்றம் என அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, உடல் அடக்கம் அல்லது தகனத்தைத் தடுப்போருக்குப் பொதுச்சுகாதார சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ஓராண்டு அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அரசு அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கிறது.