தமிழ்நாடு

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

webteam

திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி பேராசிரியர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருத்தணி அருகே அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் ஈமத் தாழியின் மேல்விளிம்புப் பகுதிகள், கல்லூரியின் மாணவர்கள் மற்றும் வரலாற்றுத்துறை பேராசிரியர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற தொல்லியல் துறை அதிகாரிகள், இவ்வகையான ஈமத் தாழிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கப் பெற்றதாக தெரிவித்தனர். மத்திய, மாநில அரசுகளின் உரிய அனுமதி பெற்று அகழ்வாய்வினை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறினர். கண்டெடுக்கப்பட்ட தாழிகள் கி.மு. 3000 முதல் கி.மு. 300 வரையிலான காலத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.