தமிழ்நாடு

ஈமு கோழி முதலீட்டு மோசடி - யுவராஜ் உள்ளிட்ட மூவருக்கு 10 ஆண்டு சிறை

ஈமு கோழி முதலீட்டு மோசடி - யுவராஜ் உள்ளிட்ட மூவருக்கு 10 ஆண்டு சிறை

Sinekadhara

ஈமு கோழி முதலீட்டு மோசடியில் கொங்கு பேரவை அமைப்பின் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2.47 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் யுவராஜ், தமிழ்நேசன், வாசு ஆகியோர் ஈமு கோழி வளர்ப்பு முதலீட்டு திட்டம் தொடங்கி, அதில் 121 முதலீட்டாளர்களிடம் தலா ரூ.1.5 லட்சம் முதலீடு பெற்று மோசடி செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இதில் மூன்று பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2.47 கோடி அபராதமும் விதித்து தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதில் யுவராஜ் என்பவர் கோகுல்ராஜ் கொலைவழக்கில் தொடர்புடையவர்.