தமிழ்நாடு

சிறைக் கைதிகளைக் கொண்டு 4 பெட்ரோல் பங்குகள் : இன்று திறப்பு

சிறைக் கைதிகளைக் கொண்டு 4 பெட்ரோல் பங்குகள் : இன்று திறப்பு

webteam

தமிழகத்திலேயே முதன்முறையாக சிறைக் கைதிகளைக் கொண்டு இயக்கப்படும் 4 பெட்ரோல் பங்குகள் இன்று திறக்கப்பட உள்ளன. 

தமிழகத்தில் பல்வேறு பெட்ரோல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய முயற்சியாக சிறைக் கைதிகளைக் கொண்டு இயக்கப்படும் 4 புதிய பெட்ரோல் பங்குகள் இன்று திறக்கப்படவுள்ளன. இதன்மூலம் சிறைக்கைதிகள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுகின்றனர். பொதுமக்களுக்கும் சிறைக்கைதிகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியாகவே இதுபோன்ற பெட்ரோல் பங்குகள் திறக்கப்படுகின்றன.

இதில், புதுக்கோட்டையில் திறக்கப்படும் பெட்ரோல் பங்கில் திருச்சி மத்திய சிறையில் உள்ள 24 நன்னடத்தை பெற்ற தண்டனை கைதிகள் பணியமர்த்தப்படுகின்றனர். அவர்கள் பணி செய்வதற்கான ஊதியங்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் வழங்கப்படும். சிறைக்கைதிகளை கண்காணிக்க தனி காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்தத் தகவலை புதுக்கோட்டையில் சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.