தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் காவலர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ராமநாதபுரத்தில் காவலர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

webteam

(கோப்புப் புகைப்படம்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் களப்பணியாற்றி வந்த காவலர் உட்பட மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் வெளியே வராமல் தடுக்க காவலர்களும், மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க சுகாதாரப் பணியாளர்களும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.

அந்த வகையில், ராமநாதபுரத்திலும் காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த காவலர் மற்றும் பனைக்குளத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் மற்றும் உச்சிப்புளியைச் சேர்ந்த டெங்கு தடுப்பு பணியாளர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மூன்று பேரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா பாதித்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இதில்,10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.