தமிழ்நாடு

மெரினாவில் கரை ஒதுங்கிய 3 சடலங்கள்..!

மெரினாவில் கரை ஒதுங்கிய 3 சடலங்கள்..!

Rasus

சென்னை மெரினாவில் ஒரே நாளில் மூவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் குளிப்பதற்கு போலீசார் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தொடர் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவ்வப்போது குளிக்கச் செல்பவர்கள் கடல் அலைகளில் சிக்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் மெரினாவில் நேற்று ஒரே நாளில் மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொடுங்கையூரைச் சேர்ந்த மாணவன் கண்ணன் என்பவர் தனது நண்பர்களுடன் கடலில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதே போல, திருவள்ளூரைச் சேர்ந்த ஜெயசந்திரன் என்பவர் தனது நண்பருடன் குளித்துக் கொண்டிருந்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தார். இவர்கள் இருவரின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், அடையாளம் தெரியாத மற்றொரு இளைஞரின் உடலும் கரை ஒதுங்கியுள்ளது. இது குறித்து அண்ணாசதுக்கம் காவல்துறையினர் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் என்னதான் கட்டுபாடுகளை விதித்தாலும், பொதுமக்கள் கடலில் குளிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் குளித்தால் மட்டுமே உயிரிழப்புகளை குறைக்க முடியும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.