தமிழ்நாடு

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: கமல் கண்டனம்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: கமல் கண்டனம்

Veeramani

தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் அறிக்கைப் போரில் ஆர்வம்காட்டுவதை நிறுத்திவிட்டு ஆயுதக் கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வழி தேடுங்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும். பழி போடும் அரசியலை நிறுத்தி விட்டு ஆயுதக் கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள்” என தெரிவித்துள்ளார்

சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த தலில் சந்த், மனைவி புஷ்பா, மகன் ஷீத்தல் ஆகியோர் நேற்று மாலை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். இது தொடர்பான குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படை காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.