தமிழ்நாடு

காங். எம்.பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

காங். எம்.பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

webteam

தன்னை ஒரு கைதி போல காவல்நிலையத்திற்கு காவலர்கள் அழைச்சென்றதாக கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நாங்குநேரி வழியாக செல்ல முயன்ற எம்பி வசந்தகுமார் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரை நாங்குநேரி காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அவர்மீது தேர்தல் விதிமுறைகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைந்ததாக, தேர்தல் அதிகாரி ஜான் கேப்ரியல் புகார் அளித்தார். 

அதன் அடிப்படையில், தேவையின்றி கூட்டத்தை கூட்டுதல், சம்பந்தம் இல்லாத நபர் தொகுதிக்குள் நுழைதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார், “என்னை கைதியை அழைத்துச்செல்வது போல காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். என்னால் நாங்குநேரியில் காங்கிரஸ் வெற்றிபெறும் என அச்சப்படுகின்றனர்” என்று கூறினார்.