தமிழ்நாடு

கோடநாடு வழக்கு - முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் தனிப்படை விசாரணை

கோடநாடு வழக்கு - முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் தனிப்படை விசாரணை

Sinekadhara

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் தனிப்படையினர் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து ஆகஸ்ட் மாதம் முதல் காவல்துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு மாதங்களாக எவ்வித விசாரணையும் நடைபெறாத நிலையில், விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, கோவை காவலர் பயிற்சி பள்ளியில் உள்ள அலுவலகத்தில் கவுண்டம்பாளையம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ஓட்டுநர் கனகராஜ் விபத்து மற்றும் கோடநாடு எஸ்டேட்டின் கணினி ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை ஆகிய இரு மரணங்கள் குறித்தும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதேபோல, 2017ஆம் ஆண்டு ஆறுக்குட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.