சசிகலா குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சசிகலா மற்றும் டிடிவி குடும்பத்தினர், உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் 40 இடங்களில் சோதனை நிறைவு பெற்றுவிட்டது. இருப்பினும் மற்ற இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல இடங்களில் நாளையும் சோதனை தொடரும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2வது நாள் சோதனை நடைபெற்ற முக்கிய இடங்கள்:
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்
கோடநாடு எஸ்டேட்டிற்கு சொந்தமான கர்சன் கிரீன் டீ எஸ்டேட்
ஜெயலலிதாவின் மருத்துவர் சிவக்குமார் வீடு
சென்னை போயஸ் கார்டனில் பழைய ஜெயா டிவி அலுவலகம்
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் தற்போதுள்ள ஜெயா டிவி அலுவலகம், நமது எம்ஜிஆர் அலுவலகம்
சென்னை படப்பையில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை
சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீடு
செந்திலின் நண்பர் சுப்பிரமணியம் வீடு
தஞ்சையில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் வீடு
புதுச்சேரியில் உள்ள தினகரனின் பண்ணை வீடு
தினகரன் தாயார் வனிதாமணி வீடு
தினகரனின் நண்பர் சண்முகம் வீடு
தினகரன் ஆதரவாளர் ராஜேஸ்வரன் வீடு
கடலூரில் தினகரன் ஜோதிடர் சந்திரசேகர் வீடு
டிடிவி ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வனின் உதவியாளர் கனகராஜ் வீடு
தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீடு
மகாலிங்கபுரத்தில் உள்ள இளவரசி மகன் விவேக் வீடு
அண்ணாநகரில் உள்ள விவேக்கின் மாமனார் பாஸ்கர் வீடு
மன்னார்குடியில் உள்ள திவாகரன் வீடு
சென்னை வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமாஸ்
புதுச்சேரி லஷ்மி ஜுவல்லர்ஸ்
லட்சுமி ஜுவல்லரி நகைக்கடை மேலாளர் தென்னரசு வீடு
ஈரோட்டில் உள்ள கொத்தமங்கலம் காகித ஆலை
கோவையில் முன்னாள் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் வீடு