செய்தியாளர் சந்தானக் குமார்
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் 24 முதல் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உதாரணமாக, ஒரேநாடு, ஒரே தேர்தல் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் பேசி இருந்த சூழலில், ஒரேநாடு ஒரேதேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட இருக்கிறது.
அடுத்ததாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் சூழலில், மத்திய அரசை காரணம் காட்டி சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளாத தமிழ்நாடு மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், டாஸ்மாக் கடைகளை காலநிர்ணயம் செய்து மூடவேண்டும் என்ற முக்கிய தீர்மானங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. இதில் மிக முக்கியமாக ஆளுநரைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. மாநாட்டுக்கு வரும்போது உயிரிழந்த 6 நபர்களுக்கும் இரங்கல் தீர்மானமும் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழக அரசையும் மத்திய அரசையும் வரவேற்று ஒவ்வொரு தீர்மானம் கொண்டுவரப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.