தமிழ்நாடு

வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த 2500 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த 2500 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

webteam

ஆவடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நட்சத்திர ஆமைகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

சென்னை ஆவடி அடுத்த மோரை கிராமத்தில் இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக நட்சத்திர ஆமைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் மோரை கிராமத்தில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2500 நட்சத்திர ஆமைகள் உயிருடன் பறிமுதல் செய்ததோடு உரிமையாளர் வெங்கடேஷ் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவை வெளிநாடுகளுக்கு க‌டத்த இருந்தது தெரியவந்தது. மேலும் வெங்கடேஷின் கூட்டாளி தமீம் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன. இதன் மதிப்பு 25 லட்சம் ரூபாய் என்றும் கூறப்படுகிறது.