தமிழ்நாடு

திருச்சி மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்படவுள்ள 25 ஊராட்சிகள் - முதற்கட்ட பணிகள் தொடக்கம்

திருச்சி மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்படவுள்ள 25 ஊராட்சிகள் - முதற்கட்ட பணிகள் தொடக்கம்

நிவேதா ஜெகராஜா
திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ள ஊராட்சிகளின் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் இணைப்புக்குறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு இன்று ஆலோசனை நடத்தினார். 
திருச்சியை சேர்ந்த,
* அந்தநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மல்லியம்பத்து, மருதாண்டாகுறிச்சி, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர்
* மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட முடிகண்டம், மேக்குடி, கே.கள்ளிக்குடி, தாயனூர், நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, நாகமங்கலம், புங்கனூர்
* திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையக்குறிச்சி, குண்டூர், நவல்பட்டு, சோழமாதேவி, கீழக்குறிச்சி
* லால்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாளக்குடி, மடக்கொடி, அப்பாதுறை, எசனைக்கோரை, புதுக்குடி
* மண்ணச்சநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதவபெருமாள் கோவில்,  பிச்சாண்டார் கோவில், கூத்தூர்
ஆகிய 25 ஊராட்சிகளையும், திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கலாம் என தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து 25 ஊராட்சிகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்க அரசு முடிவு செய்தது. இதில் முதற்கட்டமாக, மாநகராட்சியுடனான இணைப்புக்குறித்து, ஊராட்சி மன்ற தலைவர்களுடன், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு ஆலோசனை நடத்தி இன்று கருத்துக்களை கேட்டுக்கொண்டார்.