தமிழக பாஜகவில் 25 மாவட்டத் தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பிலிருந்து புதியதாக கட்சி நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் காரணமாக நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படாமல் அப்படியே தொடர்ந்தனர், இந்த நிலையில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாஜக நிர்வாகிகள் பட்டியல் மாற்றத்துடன் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் சரியாக பணி செய்யாத 8 மாவட்ட தலைவர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக 8 மாவட்ட பொறுப்பாளர்களை கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி அண்ணாமலை நியமித்தார்.
அதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பாஜகவில் 60 மாவட்டம் அமைப்பு ரீதியாக உள்ள நிலையில், இதில் 59 மாவட்டங்களுக்கான மாவட்ட தலைவர்கள் யார் யார் என்பதை அண்ணாமலை அறிவித்துள்ளார். அதில் 25 மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மேற்கு மாவட்டத்திற்கு மட்டும் இன்னும் யார் மாவட்ட தலைவர் என்று அறிவிக்கப்படவில்லை. மேலும், தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர்களாக 20 பேரை நியமித்து அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புகள் முதற்கட்டமாக வெளியாகி உள்ள நிலையில் அடுத்த கட்டமாக அணி, பிரிவு நிர்வாகிகள், கட்சியின் முக்கியமான பொறுப்புகளான பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள் மற்றும் துணைத் தலைவர்களிலும் விரைவில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25 மாவட்டங்களில் தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்ட மாவட்டங்கள்:
• தூத்துக்குடி மேற்கு
• தூத்துக்குடி வடக்கு
• நெல்லை
• தென்காசி
• ராமநாதபுரம்
• புதுக்கோட்டை
• விருதுநகர் கிழக்கு
• விருதுநகர் மேற்கு
• தஞ்சாவூர் தெற்கு
• திருவாரூர்
• நாகப்பட்டினம்
• மயிலாடுதுறை
• கடலூர் மேற்கு
• வேலூர்
• திருவண்ணாமலை வடக்கு
• கிருஷ்ணகிரி கிழக்கு
• தர்மபுரி
• திருவள்ளுவர் கிழக்கு
• திருவள்ளூர் மேற்கு
• வட சென்னை மேற்கு
• சேலம் கிழக்கு
• ஈரோடு தெற்கு
• ஈரோடு வடக்கு
• திருப்பூர் தெற்கு
• கோவை நகர்
இதையும் படிக்கலாம்: கோடநாடு வழக்கு - ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் 9 மணி நேரம் விசாரணை