தமிழ்நாடு

மதுரையில் நாளை நடக்கவிருந்த 24 திருமணங்கள் ஒத்திவைப்பு

மதுரையில் நாளை நடக்கவிருந்த 24 திருமணங்கள் ஒத்திவைப்பு

webteam

நாளை சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை மாநகர் பகுதியில் நாளை நடக்கவிருந்த 24 திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் யுத்தத்தில் அடுத்த 3 முதல் 4 வாரங்கள் மிக முக்கியமானதாக இருக்கும் என பிரதமர் மோடி
தெரிவித்துள்ளார். அத்துடன் நாளை காலை 7 மணி முதல் இரவு மணி 9 வரை தானாக முன்வந்து, மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும்
பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து, பொதுமக்கள் நாளை தாமாகவே‌ முன்வந்து‌ ஊர‌டங்கு நிலையை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமி, அன்றைய தினம் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடாது என்று அறிவித்துள்ளார். சுய ஊரடங்கையொட்டி தமிழகத்தில் நாளை
டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நாளை சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை மாநகர் பகுதியில் நடக்கவிருந்த 24 திருமணங்கள்
ஒத்திவைக்கப்பட்டுள்ளன.