தமிழ்நாடு

ஏப்ரல் 1 முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: முதல்வர் பழனிசாமி

ஏப்ரல் 1 முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: முதல்வர் பழனிசாமி

webteam

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி ஏற்கெனவே அறித்திருந்தார். இந்நிலையில் இன்று சேலம் திட்டம்பட்டியில் ரூ.565 கோடியில் நிறைவேற்றப்பட்ட மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர், பேசிய அவர், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், 5 ஆண்டு காலத்தில் 2 முறை விவசாயிகளின் பயிக்கடனை ரத்து செய்த அரசு அதிமுக அரசு எனவும் குறுகிய காலத்தில் விவசாயிகளுக்காக மேட்டூர் - சரபங்கா உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.