தமிழ்நாடு

தமிழகத்தில் ஆபத்தான நிலையில் நிலத்தடி நீர்மட்டம் !

jagadeesh

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 22 சதவிகிதம் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் மிகவும் ஆழத்திற்குச் சென்று ஆபத்தான நிலையில் இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. அதிக அளவாக தமிழ்நாட்டில்தான் நிலத்தடி நீர்மட்டம் அதிக ஆழத்திற்குச் சென்றுள்ளதும் தெரியவந்திருக்கின்றது.

நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்யும் மத்திய வாரியம் இது தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 22 சதவிகிதம் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் வறண்டு போனது அல்லது மிகவும் கீழே இறங்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் 541 பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆபத்தான நிலையில் அ‌திக ஆழத்திற்குச் சென்றுவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அடுத்தபடியாக, ராஜஸ்தானில் 218 பகுதிகளிலும், உத்தரப்பிரதேசத்தில் 139 பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் மிக ஆழத்திற்குச் சென்றுவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக வேளாண் துறையில் 10 சதவிகித அளவிற்கு தண்ணீரை சேமிப்பதன் மூலம் நாட்டில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு நீர்ப்பற்றாக்குறையை குறைக்க முடியும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.