தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்

webteam

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்தக அமிலம் 94 டேங்கர் லாரிகள் மூலம் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமிலம் சேமிப்பு கொள்கலனில் கசிவு ஏற்பட்டதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து தூத்துக்குடி சார் ஆட்சியர் பிரசாத் தலைமையிலான குழு, ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டது. இதில் கந்தக அமில கொள்கலனில் லேசான கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. 

இதையடுத்து கசிந்த கந்தக அமிலத்தை அகற்றும் பணி கடந்த 18ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால், ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு கந்தக அமிலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக அகற்றப்பட்ட 1300 டன் கந்தக அமிலம் 75 டேங்கர் லாரிகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் அகற்றும் பணியின் 7வது நாளான இன்று, 2124 டன் கந்தக அமிலம் 94 டேங்கர் லாரிகள் மூலம் தமிழகத்தின் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.