தமிழ்நாடு

கொரோனா : தமிழகத்தில் இரண்டாவது நபர் குணமடைந்து வீடு திரும்பினார்

கொரோனா : தமிழகத்தில் இரண்டாவது நபர் குணமடைந்து வீடு திரும்பினார்

webteam

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 21 வயது இளைஞர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 39 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். அதில் இப்போது வரை மதுரையைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்தியாவில் இதுவரை 834 பேர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2வது நபர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "அயர்லாந்தின் டப்ளினில் இருந்து பயணம் செய்த 21 வயது நபர் ஒருவர் கொரோனா வைரஸிலிருந்து முற்றிலுமாக மீண்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து 2 முறை சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் வந்ததையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். அவர் அடுத்த 14 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார். இந்த இளைஞனைக் கவனித்த மருத்துவக் குவினரைப் பாராட்ட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.