மழை pt web
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரம்.. 21 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

காலை 10 மணி வரை சென்னை உட்பட 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விருதுநகர், மதுரை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூரில் மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.