அடுத்த ஆண்டு மொத்தம் 23 நாள்கள் பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் 2 சனிக்கிழமைகளிலும், 3 ஞாயிற்றுக்கிழமைகளிலும் வருகின்றன.
2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின்படி, அடுத்த ஆண்டு மொத்தம் 23 நாள்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் திருநாள் என கிறிஸ்துமஸ் வரை 23 நாள்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இத்துடன் ஏப்ரல் 1-ம் தேதி வணிகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதிகளவாக ஜனவரி மாதம் 5 நாள்கள் பொது விடுமுறையாகும். ஏப்ரல் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் தலா 4 நாள்கள் பொது விடுமுறை வருகிறது. குடியரசு தினம், தெலுங்கு வருடப்பிறப்பு, மொகரம் பண்டிகை ஆகியவை ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.