கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்திற்கு உணவு மானிய தொகைக்காக எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதென மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் உணவு மானியம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் பூபேந்தர் சிங்கின் கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் அமைச்சர் சத்வி நிரஞ்சன் ஜோதி பதில் அளித்துள்ளார்.
அதில், கடந்த 5 ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டில் மத்திய அரசால் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் விடுவிக்கப்பட்டுள்ள உணவு மானியம் 2017 - 18 ஆம் ஆண்டு ரூபாய் 38,000.00 கோடியும், 2018 - 19 ஆம் ஆண்டு ரூபாய் 31,029.48 கோடியும் , 2019 - 20 ஆம் ஆண்டு ரூபாய் 44,944.36 கோடியும் , 2020 - 21 ஆம் ஆண்டு ரூபாய் 66,901.77 கோடியும் , 2021 - 22 ஆம் ஆண்டு ரூபாய் 79,789.54 கோடியும், 2022 - 23 (30.11.2022 வரை) ஆம் ஆண்டிற்கு ரூபாய் 41,854.83 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 2017 - 18 ஆம் ஆண்டு 651.70 கோடியும் 2018 - 19 ஆம் ஆண்டு 1136.61 கோடியும், 2019 - 20 ஆம் ஆண்டு 3242.79 கோடியும், 2020 - 21 ஆம் ஆண்டு 3109.76 கோடியும், 2021 - 22 ஆம் ஆண்டு 6250.93 கோடியும், 2022 - 23 (30.11.2022 வரை) ஆம் ஆண்டு 4974.94 கோடியும் மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.