தமிழ்நாடு

திமுக, அதிமுக இடையே குறைவான சதவீதம் வாக்குகள்தான் வித்தியாசம்: கடந்த தேர்தல்கள் ஓர் பார்வை

திமுக, அதிமுக இடையே குறைவான சதவீதம் வாக்குகள்தான் வித்தியாசம்: கடந்த தேர்தல்கள் ஓர் பார்வை

EllusamyKarthik

2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழகம் 133 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை விட 4.41 சதவிதம் வாக்குகள் மட்டுமே அதிமுக குறைவாக பெற்றுள்ளது. 

இந்நிலையில் 2016 மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தல், 2019 பொதுத் தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்பதை பார்ப்போம்.. 

2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் :

நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

>அதிமுக 33.29%

>திமுக 37.70%

>பாஜக 2.62%

>இந்திய கம்யூனிஸ்ட் 1.09%

>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  0.85%

>தேமுதிக 0.43%

>காங்கிரஸ் 4.27%

>பாமக 3.80%

>நாம் தமிழர் கட்சி 5% (உத்தேசமாக)

>மற்றவை 9.46%

>NOTA 0.75%

2019 பொதுத் தேர்தல்

2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. திமுக, அதிமுக இடையே வாக்குவித்தியாசம் அதிக அளவில் இருந்தன.

>திமுக 32.76%

>அதிமுக 18.48%

>காங்கிரஸ் 12.26%

>இந்திய கம்யூனிஸ்ட் 2.43%

>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2.40%

>விசிக 1.18%

>பாமக 5.42%

>தேமுதிக 2.19%

>பாஜக 3.66%

>நாம் தமிழர் கட்சி 3.88%

>மக்கள் நீதி மய்யம் 3.70%

>NOTA 1.28%

2016 தமிழக சட்டப்பேரவை தேர்தல் 

2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 136 இடங்களிலும், திமுக கூட்டணி 98 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்தத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவிதத்திற்கும், திமுக கூட்டணியின் வாக்குசதவிதத்திற்கும் இடையே குறைவான வாக்குகள் வித்தியாசம் இருந்தது. பல இடங்களில் திமுக வேட்பாளர்கள் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினர்.

>அதிமுக 40.88%

>திமுக 31.39%

>பாஜக 2.86%

>இந்திய கம்யூனிஸ்ட் 0.79%

>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  0.72%

>தேமுதிக 2.41%

>காங்கிரஸ் 6.47%

>பாமக 5.36%

>நாம் தமிழர் கட்சி 1.07% (உத்தேசமாக)

>தமிழ் மாநில காங்கிரஸ் 0.54%

>NOTA 1.31%

- தொகுப்பு : எல்லுச்சாமி கார்த்திக்