தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 2000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு குமரி மாவட்டத்தில் இருந்தும் நெல்லை, தூத்துக்குடி உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், ரேஷன் அரிசி கடத்தல் என்பது தொடர் கதையாகயே உள்ளது.
இந்நிலையில் குளச்சல் அருகே இன்று விடியற்காலம் பகுதியில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த நேரத்தில், சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு காரை நிறுத்த முற்பட்ட போது நிற்காமால் அதிவேகமாக சென்றது. விரட்டி பின்னால் சென்று காரை துரத்தி செல்லும் போது ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடி உள்ளார்.
அந்த காரை சோதனை செய்த போது சுமார் 2000 கிலோ கடத்தல் அரிசி கேரளா மாநிலத்திர்கு கடத்துவதற்கு ஏதுவாக இருந்ததையடுத்து, வாகனத்துடன் 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார்விளை அரசு நுகர்பொருள் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.