தமிழ்நாடு

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 20 சவரன் நகை பறிப்பு

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 20 சவரன் நகை பறிப்பு

webteam

வீட்டில் தனியாக இருந்த பெண்னிடம் கத்தியை காட்டி மிரட்டி, 20 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் 3வது தெருவில் வசித்து வருபவர் விஜயா. இவர் ஓய்வுப் பெற்ற மின்வாரிய ஊழியர். இவரது கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் விஜயா பக்கதது வீட்டில் உள்ள தனது தோழியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் புகுந்த ஹெல்மெட் அணிந்திருந்த அடையாளம் தெரியாத நபர் விஜயாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 20 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் விஜயா புகார் அளித்தார். புகாரின் பேரில்,வழக்குபதிவு செய்த வடக்கு காவல் நிலைய போலீசார் குற்றவாளியை பிடிகக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.