தமிழ்நாடு

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை: உயர் நீதிமன்றம் உத்தரவு

webteam

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவிகித முன்னுரிமை வழங்க வேண்டுமென்ற தமிழக அரசின் ஆணையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்‌ வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவிகிதம் முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 2010ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டு இருந்தது. ஆனால், அந்த அ‌ரசாணையை தமிழக அரசு முறையாக பின்பற்றவில்லை என்று திருவண்ணாமலையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

முதுநிலை வரை தமிழில் படித்த தனக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், த‌மிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவிகிதம் முன்‌னுரிமை வழங்க வேண்டும் என்றும், 2010ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.