தமிழ்நாடு

சரியான அளவில் சுடிதார் தராத துணிக்கடை - 20 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

சரியான அளவில் சுடிதார் தராத துணிக்கடை - 20 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

webteam

அனார்கலி சுடிதார் வாங்கிய 11 வயது சிறுமிக்கு சரியான பேண்ட் கொடுக்காதது நேர்மையற்ற வாணிபம் எனக்கூறி ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க துணிக்கடை நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளிக்காக நெல்லை டவுனில் உள்ள தனியார் துணிக்கடையில் 11 வயது சிறுமி மகாலட்சுமி என்பவர் அனார்கலி சுடிதாரை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார். அந்த சுடிதாரின் டாப் அளவு சரியாக இருந்துள்ளது. அதற்கான பேண்ட் அளவு பொருந்தவில்லை. இதனால் தீபாவளி அன்று புதிய சுடிதாரை மகாலட்சுமி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,

இதைத்தொடர்ந்து மகாலட்சுமி சுடிதாரை மாற்றம் செய்து கேட்டுள்ளார். அதற்கு துணிக்கடை நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால் சிறுமி மகாலட்சுமியின் தாய் கோமதி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் துணிக்கடை நிறுவனம் செய்தது நேர்மையற்ற வாணிபம் மற்றும் சேவை குறைபாடு என்பதால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 15 ரூபாயும் வழக்குச் செலவு 5000 ரூபாயும் சேர்த்து மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. 

மேலும் மனுதாரரிடம் கொடுத்த அனார்கலி சுடிதாரை திரும்பப் பெற்றுக்கொண்டு மனுதாரரிடம் வாங்கிய ஆயிரம் ரூபாயை திரும்ப வழங்க வேண்டும் எனவும் ஒரு மாத காலத்தில் வழங்க வேண்டும் தவறினால் 6 % வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.