அர்ச்சகர் குருவாயூரப்பன் file
தமிழ்நாடு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தீபாராதனை காட்டிய போது ஏற்பட்ட தீ விபத்து - இரண்டு அர்ச்சகர்கள் காயம்!

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தீபாராதனை காட்டிய போது ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு அர்ச்சகர்கள் காயமடைந்தனர்.

webteam

செய்தியாளர்: நிக்சன்

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் தொடங்கியுள்ள நிலையில், நேற்று பூச்சொரிதல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

samayapuram mariamman temple

இந்நிலையில் இன்று அதிகாலை கோயில் அர்ச்சகர்கள் குரு என்ற குருவாயூரப்பன் மற்றும் நாகநாதன் ஆகியோர் அம்மனுக்கு தீபாராதளை காட்டினர். அப்போது வெட்டி வேரில் தீப்பற்றி எரிந்தது. இதனை அறிந்து இரண்டு அர்ச்சகர்களும் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் தீ இவர்கள் மேல் பட்டுள்ளது. இதனைப் பார்த்த பக்தர்களும் ஆலய பணியாளர்களும் அர்ச்சர்கள் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிறுகனூர் எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் குருவாயூரப்பன் என்ற அர்ச்சகருக்கு 40 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த அர்ச்சகர் குருவாயூரப்பன் குடும்பத்தினர், அவரை திருச்சி மாருதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த தீ விபத்து தொடர்பாக சமயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கோயில் உள்ளே அச்சகர்களுக்கு ஏற்பட்ட தீ விபத்து, பக்தர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.