தமிழ்நாடு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்த 2 பேருக்கு கொரோனா...!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்த 2 பேருக்கு கொரோனா...!

webteam

பூந்தமல்லியில் 9 வயது சிறுவன் உட்பட மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்க்கும் போது பரவியது தெரியவந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தனியார் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்துவந்த பூந்தமல்லியை சேர்ந்த மேனேஜர் ஒருவருக்கும் அவருடன் தாயம் விளையாடிய அவரது நண்பருக்கும் கொரோனே தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி அவர்களது இரத்த மாதிரிகளையும் சுகாதார துறை அதிகாரிகள் பரிசோதனை செய்ததில் மேனேஜரை மருத்துவமனையில் கொண்டுசென்று சேர்த்த அவரது நண்பர் 28 வயதுடைய ஆன்லைனில் ஜாதகம் பார்க்கும் நபருக்கும் அவரது உறவினர் மகனான 9 வயது சிறுவனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரையும் சுகாதார துறை அதிகாரிகள் சென்னை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் இரத்த மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்த நண்பருக்கும் அவரது உறவினர் மகன் 9 வயது சிறுவனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.