தமிழ்நாடு

மோதலில் ஈடுபட்ட 2 மாணவர்கள் சஸ்பெண்ட் - கல்லூரி முதல்வர் பேட்டி 

மோதலில் ஈடுபட்ட 2 மாணவர்கள் சஸ்பெண்ட் - கல்லூரி முதல்வர் பேட்டி 

webteam

அரும்பாக்கத்தில் பேருந்திற்குள் பட்டாக்கத்தியுடன் மோதிய  சம்பவம் தொடர்பாக 2 மாணவர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருண்மொழிச்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, “பேருந்திற்குள் பட்டாக்கத்தியுடன் மோதிய 2 மாணவர்கள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும். பச்சையப்பன் கல்லூரியில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படுவதில்லை. மாணவர்களின் செயல்களுக்கு அவர்களின் குடும்பச் சூழலும் ஒரு முக்கிய காரணம். 

மாணவர்கள் ஆயுதம் எடுத்து வருவதை தடுக்க காவல்துறையுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரிகளுக்கு எந்த மாணவரும் கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து வருவதில்லை. மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாலும் கல்லூரிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாலும் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோதலில் ஈடுபடும் மாணவர்களை திருத்துவதற்கு மனநல ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. மாணவர்களை கண்காணிக்க ஆசிரியர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.