வாக்காளர் பட்டியல் முகநூல்
தமிழ்நாடு

“கடந்த 2 ஆண்டுகளில் 2 மில்லியன் போலி வாக்காளர்கள் நீக்கம்”- மாநில தேர்தல் ஆணையம் தகவல்

கடந்த 2 ஆண்டுகளில் 2 மில்லியன் போலி வாக்காளர்களின் எண்ட்ரிகள் பதிவேடுகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்த ஒரே மாதிரியான புகைப்படங்கள், மக்கள் தொகை பதிவுகள், வாக்காளர் பதிவுகளை கொண்ட வாக்காளர்களின் பெயர்கள் அனைத்தும் மென்பொருளை பயன்படுத்தி நீக்கப்பட்டுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நேற்று காலை சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேசுகையில், “சந்தேகத்திற்குரிய வாக்காளர்களுக்கு அவர்கள் பதிசெய்துள்ள முகவரிக்கு விரைவு தபால்கள் மூலமாக நோட்டீஸ் வழங்கப்படும்.

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

அந்த முகவரியில் அவ்வாக்காளர் இல்லை என்று தபால் துறை அவற்றை திருப்பி எங்களுக்கு அனுப்பினாலோ, அல்லது அது பெறப்பட்ட பின்னரும் குறிப்பிட்ட காலத்திற்குள் அதுகுறித்து எந்த தகவலையும் வாக்காளர்கள் வழங்கவில்லை என்றாலோ தேர்தல் பதிவு அதிகாரி electoral registration officer (ERO), சம்பந்தப்பட்ட அவ்விடத்தில் இருக்கும் அதிகாரிக்கு [block level officer (BLO)] நேரில் சென்று அதுகுறித்து விசாரிக்கும்படி அனுப்பிவைக்கப்படுவார்.

அந்த அதிகாரியும் ‘அவரை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை’ எனக்கூறும்பட்சத்தில், 15 நாட்கள் கால அவகாசத்தில் வாக்காளர் பட்டியலிருந்து அந்நபர் நீக்கப்படுவார். ஒருவேளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அந்நபர் ஆட்சேபனை தெரிவித்தால், ERO அதிகாரி உரிய முறையில் விசாரணை நடத்தி அவ்விண்ணப்பத்தினை தள்ளுபடி செய்யலாம்” என்று தெரிவித்தார்.

இதனடிப்படையில் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சந்தேகிக்கும் வகையில் இருந்த (ஒரே மாதிரியான புகைப்படங்கள், மக்கள் தொகை பதிவுகள், வாக்காளர் பதிவுகள் அடிப்படையில்) அந்த வாக்காளர்களின் பெயர்களை தனித்துவமான மென்பொருளை பயன்படுத்தி நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படி 2 ஆண்டுகளில் 2 மில்லியன் நகல் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கொண்டு அக்டோபர் 27-ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமும் நவம்பர் 4, 5, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு, ஜனவரி 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என நேற்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.