சேலம் மாநகரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத தனியார் பள்ளிக்கு 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நரசோதிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார், அப்போது கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியபட்டதால், பள்ளி நிர்வாகத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டபோது எல்.ஆர்.என் எனும் தனியார் பேருந்து நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேருந்து நி்றுவனத்திற்கு ஆட்சியர் 15 லட்ச ரூபாய் அபராதம் விதித்தார்