தங்கச் சங்கிலியை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த சிறுவர்கள்  pt desk
தமிழ்நாடு

அமராவதி முதலை பண்ணை: கீழே கிடந்த தங்கச் சங்கிலியை மீட்டு சிறுவர்கள்!

PT WEB

செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி முதலை பண்ணைக்கு சுற்றுலா சென்ற திருச்செந்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 3 பவுன் தங்கச் சங்கிலியை அங்கே தவறவிட்டுள்ளார்.

அச்சமயத்தில் முதலை பண்ணையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவர், தங்கச்சங்கிலி ஒன்று கீழே கிடப்பதை பார்த்து எடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த தங்கச் சங்கிலியை அங்கிருந்த வனத்துறையினரிடம் அவர்கள் ஒப்படைத்துள்ளனர்.

கீழே கிடந்த தங்கச் சங்கிலி

அடுத்த சில நேரத்தில், அந்த தங்கச் சங்கிலியை தொலைத்தவர்கள் தேடிவந்து முதலை பண்ணையில் பணியில் இருந்தவர்களிடம் கூறி வாங்கிச் சென்றுள்ளனர்.

கீழே கிடந்த தங்கச் சங்கிலியை பொறுப்புடன் எடுத்து முதலை பண்ணையில் உள்ள வனத்துறையினரிடம் ஒப்படைத்த சிறுவர்கள் சரவணன்கிரி மற்றும் பிரதீஸ் என தெரியவந்துள்ளது. இதையடுத்து தற்பொழுது இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.