தமிழ்நாடு

அரசு பேருந்தை வழிமறித்த 17 காட்டு யானைகள் - ஓட்டுனரின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்

அரசு பேருந்தை வழிமறித்த 17 காட்டு யானைகள் - ஓட்டுனரின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்

webteam

அரசு பேருந்தை 17 காட்டு யானைகள் வழிமறித்த நிலையில், தைரியமாக பேருந்தை இயக்கி யானைகளை வன பகுதிக்குள் ஓட்டுநர் விரட்டிய பதபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதிக்கு வால்பாறையில் இருந்து அரசு பேருந்து மாலை 6.45 புறப்பட்டு சின்னக்கல்லார் பகுதிக்கு 7.30 மணிக்கு சென்றடையும்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சின்னக்கல்லார், பெரிய கல்லார், பகுதியில் 17 காட்டு யானைகள் குட்டியுடன் சுற்றி திரிந்தன. ஆங்காங்கே வீடுகளை சேதப்படுத்தியும் வனப் பகுதியில் சுற்றி திரிந்தது. இதையடுத்து இன்று மாலை சின்னக்கல்லார் எஸ்டேட் அருகில் அரசு பேருந்தை 17 காட்டு யானைகள் வழிமறித்து சாலையில் நின்றன.

இதையடுத்து சிறிது நேரம் யானைகள் வழி விடாமல் சாலையில் நின்றதை அடுத்து ஓட்டுனர் தைரியமாக பேருந்தை இயக்கி யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டி பயணிகளை பத்திரமாக சின்னக்கல்லார் பகுதியில் இறக்கி விட்டார். பதபதைக்கும் காட்சிகள் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.