இந்தியாவின் 17% நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக மத்திய அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தண்ணீர் பிரச்னையால் தவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருக்கும் தண்ணீர் பற்றாக்குறை தொடர்பாக மத்திய அரசு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 17% நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் தான் அதிக பட்ச தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அளவில் நகரங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகள் என மொத்தம் 756 இடங்களில் தண்ணீர் பிரச்னை இருக்கிறது. மாவட்டங்கள் வாரியாக எடுக்கப்பட்டுள்ள கணக்கில் 255 மாவட்டங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் சிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள 184 நகர்ப்புற பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. அடுத்தபடியக ராஜஸ்தானின் 29 மாவட்டங்களில் 111 நகர்ப்புறங்களிலும், உத்தரப்பிரதேசத்தின் 35 மாவட்டங்களில் 84 நகர்ப்புறங்களிலும் தண்ணீர் பிரச்னை இருந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.