டாஸ்மாக் மதுபான டோக்கனை கலர் ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்த முயன்ற 16 பேர் கடலூரில் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளைத் தவிரப் பிற இடங்களில் என மொத்தம் 5300 டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், 550 பேர் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் வரிசையில் நிற்கவேண்டும், மற்றவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தனிமனித இடைவெளியைப் பின்பற்றச் செய்வதில் எந்த சமரசமும் காட்ட வேண்டாம். மேலும் டோக்கன் தரும் இடம் தனியாக அமைக்கவேண்டும், மது விநியோக கவுண்ட்டர்கள் அதிகரிக்கச் செய்யவேண்டும், பார்க்கிங் இடம் அமைக்க வேண்டும் என உத்தரவுகள் காவல்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலூரில் டாஸ்மாக் மதுபான டோக்கனை கலர் ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்த முயன்ற 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.