கடலூர் PT
தமிழ்நாடு

கடலூர்: ஒரே மீன்வலையில் சிக்கிய 150 டன் மீன்கள்!

கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு ஒரே மீன்வலையில் 150 டன் மீன் பிடிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணத்திற்காக 50 டன் மீன்கள் கடலில் விடப்பட்டன.

PT WEB

செய்தியாளர்: D.சாம்ராஜ்

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகில் மீனவர்கள் இன்று மீன் பிடிக்கும்போது, பாறை வகையை சேர்ந்த மீன்கள் சுமார் 151 டன்னுக்கும் அதிகமான அளவில், ஒரே நேரத்தில் வலையில் சிக்கின.

எடை காரணமாக இவற்றை முழுமையாக கடலில் இருந்து கரைக்கு கொண்டு வரமுடியாது என்பதாலும், மீன்கள் பலவும் இணைந்து வலைகளை கிழிக்கத் தொடங்கியதாலும், ஒரே நேரத்தில் 150 டன் மீன்களும் துள்ளி குதித்ததாலும் சுமார் 100 டன் மீன்களை மட்டுமே மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். மீதமிருந்த மீன்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக கடலில் அறுத்து விடப்பட்டன.

ஒருவேளை மீத மீன்களுக்கு மீனவர்கள் ஆசைப்பட்டிருந்தால் அவர்கள் சென்ற படகே கவிழும் அளவிற்கு ஆபத்தாகியிருக்கும் என சொல்லப்படுகிறது.