தேச துரோக வழக்கில் மதிமுக தலைவர் வைகோவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009-ம் ஆண்டு சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசியதாக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்கில் எந்த நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு, வைகோ தாமாக முன் வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். இதன் பின் நடந்த விசாரணையில், ஜாமீன் வேண்டாம் என வைகோ தெரிவித்ததையடுத்து நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். வைகோ வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இது போன்ற நீதிமன்ற வழக்குகள் தடையாக இருப்பதால், அவர் ஆஜரானதாக தெரிகிறது.