தமிழ்நாடு

மதுரை‌ தமுக்கம்‌ மைதானத்தில் 14ஆவது புத்தகத் திருவிழா

மதுரை‌ தமுக்கம்‌ மைதானத்தில் 14ஆவது புத்தகத் திருவிழா

rajakannan

மதுரை தமுக்கம் மைதானத்தில் 14-வது புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. ‌‌

தமுக்கம் மைதானத்தில் நடைபெறும்‌‌ புத்தகக் காட்சியில் 5 லட்சம் தலைப்புகளில், சுமார் 50 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 149 தமிழ் புத்தகங்களுக்கான அரங்கள், 67 ஆங்கிலப் புத்தக அரங்குகள் மற்றும் 7 பல்வகை ஊடக அரங்குகள்‌‌ என 250 அரங்குகள்‌‌‌ அமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத் திருவிழாவை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு துவங்கி வைத்தார். 

நேற்று தொடங்கி‌‌ய திருவிழா 9 ஆம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. கடந்தாண்டு 2 லட்சம் பார்வையாளர்கள் வந்தநிலையில் , இந்தாண்டு 5 லட்சம் பேர் வருவார்கள் என விழா ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தப் புத்தக திருவிழாவில் பல்வேறு தலைப்புகளில் பள்ளி மாணவ , மாணவியர்கள் பங்கேற்கும் பட்டிமன்றங்கள் , பேச்சு போட்டி , எழுத்து போட்டிகள் நடைபெற உள்ளது.