தமிழ்நாடு

திருச்சி: ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன 138 கிலோ இறைச்சிகள் அழிப்பு

திருச்சி: ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன 138 கிலோ இறைச்சிகள் அழிப்பு

Sinekadhara

திருச்சியில் ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன 138 கிலோ இறைச்சிகள் அழிக்கப்பட்டன.

திருச்சி மத்திய பேருந்து நிலையம், பால் பண்ணை, காட்டூர், துவாக்குடி, முசிறி, மணப்பாறை பகுதிகளில் உள்ள ஷவர்மா விற்பனை செய்யும் அசைவ கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 47 கடைகளில் காலாவதியான இறைச்சிகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனை செய்தபோது அவை அனைத்தும் கெட்டுப்போனது என்பது தெரியவந்தது.

இதனை விற்பனைக்கு வைத்திருந்த ஐந்து கடைகளுக்கு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். மிக மோசமான அசைவ உணவுகள் இருந்த நான்கு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டப்பிரிவு 56ன் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. 47 கடைகளில் இருந்து கெட்டுப்போன 138 கிலோ அசைவ உணவுகள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.