தமிழ்நாடு

கடந்த ஆண்டு கடலில் கலந்த 130 டிஎம்சி காவிரி நீர்!

கடந்த ஆண்டு கடலில் கலந்த 130 டிஎம்சி காவிரி நீர்!

webteam

கடந்த ஆண்டில் மட்டும் 130 டிஎம்சி காவிரி நீர்  கடலில் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது

சமீபத்தில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக மற்றும் கர்நாடக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழக விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராகி வருவதால், அதற்கு ஏதுவாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்குரிய 9 புள்ளி 19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் 130 டிஎம்சி காவிரி நீர்  கடலில் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு படி காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுக்கு 177 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். அதன்படி கடந்த ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு மே 27ஆம் தேதி வரை காவிரியில் தமிழகத்துக்கு 405 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  இதில் ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் மட்டும் 130 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக காவிரி நீரை சேமித்து வைக்க பெரிய அணை இல்லாததும் நீர் வீணாவதற்கான காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த ஓராண்டில் சுமார் 330 டிஎம்சி நீர் சாகுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.