தமிழ்நாடு

செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

webteam

கரூரில் செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் 9 ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வடக்கு பசுபதிபாளையம் கேவிபி நகரைச் சேர்ந்தவர் முத்து மாணிக்கம் - ராமாயி. இவர்களது மகன் ராஜேஷ்(13). இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே ராஜேஷ் செல்போனில் அதிகமாக கேம் விளையாடி வந்துள்ளார். எனவே அவரது தாயார் அதிகமாக கேம் விளையாடக்கூடாது என கண்டித்துள்ளார்.

இதையடுத்து ராஜேஷ், யாரும் வீட்டில் இல்லாதபோது, தனது அக்காவின் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த அக்கா தனது தம்பி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து சிறுவனை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து. தகவலறிந்த பசுபதிபாளையம் காவல் நிலையப் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.