தமிழ்நாடு

நீர்நிலைகளை பாதுகாக்கும் வழக்கு: 13 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

நீர்நிலைகளை பாதுகாக்கும் வழக்கு: 13 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

webteam

ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பது தொடர்பான வழக்கில் 13 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 13 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராயினர். நாகை, தஞ்சை, தருமபுரி, கன்னியாகுமரி, நீலகிரி, நெல்லை, திருவாரூர், விழுப்புரம், கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராயினர். ஈரோட்டைச் சேர்ந்த இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச்சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் என்பவர் தொடர்ந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராயினர். 

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்புடன் செயல்பட வேண்டும் என நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியது. கடுமையான பணிச்சுமை இருந்தாலும் இயற்கையை பாதுகாக்க நேரம் ஒதுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாப்பதில் ஏதேனும் இடையூறு இருந்தால் நீதிமன்றத்தில் தெரிவிக்கும் படியும் ஆட்சியர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.