தமிழ்நாடு

தமிழகத்தில் வேலைவாய்ப்பு எத்தனை சதவிதம் அதிகரிப்பு? ஆய்வில் வெளியான தகவல்

தமிழகத்தில் வேலைவாய்ப்பு எத்தனை சதவிதம் அதிகரிப்பு? ஆய்வில் வெளியான தகவல்

Veeramani

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் புதிதாக உறுப்பினர்களாக சேர்ந்தவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் கடந்தாண்டு பிப்ரவரியில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 441 வேலைகள் உருவானதாகவும் அது இந்தாண்டு ஜனவரியில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 544 ஆக குறைந்து பின்னர் பிப்ரவரியில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 162 ஆக அதிகரித்ததாகவும் தெரியவந்துள்ளது. அதிகபட்மாக 22 முதல் 25 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கடந்தாண்டு பிப்ரவரியில் 38 ஆயிரத்து 868பேர் வேலைவாய்ப்பு பெற்ற நிலையில் இந்த ஜனவரியில் அது 35 ஆயிரத்து 17 ஆக குறைந்து பின்னர் பிப்ரவரியில் 45 ஆயிரத்து 81 ஆக உயர்ந்துள்ளது.



35 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கடந்தாண்டு பிப்ரவரியில் 30 ஆயிரத்து ஒன்றாக இருந்த வேலைவாய்ப்பு இந்த ஜனவரியில் 26 ஆயிரத்து 688 ஆகவும் பிப்ரவரியில் 35 ஆயிரத்து 378 ஆகவும் அதிகரித்தது. மின்னணு உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி தொழில்களிலும் சேவைத் துறைகளிலும் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதாக மனித வளத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இதையும் படிக்க:பதிலடிக்கு பதிலடி - இந்தி மொழியை வைத்து ட்விட்டரில் பிரபல நடிகர்கள் வாக்குவாதம்!